Search
Wednesday 24 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தியாகி சிவகுமாரின் 45ஆவது சிரார்த்ததினம் இன்று

தியாகி  சிவகுமாரின் 45ஆவது சிரார்த்ததினம் இன்று

உரும்பிராய் பொதுச்சந்தையில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து உரும்பிராய் வேம்படி மயானத்தில் உள்ள நினைவுத் தூபியிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஒருநிமிடம் அகவணக்கத்தை தொடர்ந்து ஈகைச்சுடரை தியாகி சிவகுமாரின் சகோதரி ஏற்றிவைத்தார். பின்னர் சிவகுமாரனின் ஒளிப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், வடக்கு மாகான சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *