Search
Saturday 24 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும்’ என்று அறைகூவி மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த தியாகி திலீபனின் 32ஆவது நினைவுநாள் இன்று

‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும்’ என்று அறைகூவி  மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த  தியாகி திலீபனின் 32ஆவது நினைவுநாள் இன்று

இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் 32ஆவது நினைவுநாள் இன்றாகும்.தமிழீழ போராட்ட வரலாற்றில் என்றுமே மறக்கமுடியாத, ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவு தினத்தை உலகத் தமிழினம் இன்றும் விடியாத சுதந்திர வேட்கையுடனும், எட்டப்படாத இலட்சிய பற்றுறுதியுடனும் நினைவு கூர்கின்றது.அகிம்சை வழியாக விடுதலையை பெற்றுக் கொடுத்ததாக காந்தியை கொண்டாடும் இந்தியா உட்பட, உலக நாடுகள் அனைத்திற்குமே அகிம்சை என்பது என்ன என்பதை நிரூபித்துக் காட்டிய திலீபனை, தாயம் உட்பட உலகில் தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழ் மக்கள் இன்று நினைவுகூர்கின்றனர்.

1963ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் நாள் ஊரெழுவில் பார்த்திபன் இராசையா என்ற இயற்பெயருடன் பிறந்த திலீபன், 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தனது உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தார்.எமது திலீபனின் அகிம்சைக்கும் காந்தி தேசம் இரங்காத நிலையில், 12 நாட்கள் நீராகாரம் கூட இன்றி உண்ணாவிரதமிருந்த திலீபன், ஈழ மக்களின் கண்ணீர் வெள்ளத்திற்கு மத்தியில் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் நாள் அன்று காலை 10.48 மணிக்கு வீரச்சாவடைந்தார்.

ஒரு கொள்கையில் ஒருவர் எவ்வளவு உறுதியாக இருக்க முடியும், ஒரு போராட்டத்தை எவ்வளவு உன்னதமாக நடத்த முடியும் என்று உலகுக்கே உணர்த்தியவர்தான் திலீபன். தன் மக்களுக்காக 12 நாள்கள், ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட உடலுக்குள் செலுத்தாமல், உயிர் நீத்த திலீபனின் 32ஆவது நினைவுநாள் இன்றாகும்.வீரச்சாவுக்குமுன் தியாகி திலீபன் ஆற்றிய இறுதி உரையிலிருந்து…Thileepan-2

“என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன்.நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வோர் மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும் எனது இறுதி ஆசை இதுதான்.வெகு பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும். மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும். எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும்”

‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்” – என்று அறைகூவி, தன் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த தியாகச் செம்மல் மாவீரன் திலீபனின் பதினாறாவது நினைவாண்டுத் தினம் நெருங்குகின்ற இவ்வேளையில், நெக்குருகி நினைவஞ்சலி செலுத்தி அவனது வரலாற்றை எண்ணிப் பார்க்க விழைகின்றோம்.தியாக தீபம் திலீபன் எமது இனத்திற்கு ஊட்டிய விழிப்புணர்வை, அந்த விழிப்புணர்வின் தேவையை, நாம் இந்த வேளையில் இந்தக் காலகட்டத்தில் கருத்தில் கொள்வது பொருத்தமானது மட்டுமல்ல அவசியமானதும் கூட.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *