Search
Thursday 22 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தியாக தீபம் திலீபனின் 32 ஆவது நினைவு நாள் நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன

தியாக தீபம் திலீபனின் 32 ஆவது நினைவு நாள் நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன

உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்த தியாகதீபம் திலீபனின் 32 ஆவது நினைவு நாள் நிகழ்வுகள் இன்று காலை ஆரம்பமாகின்றன. நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் ஆரம்ப நிகழ்வுகள் இன்று காலை தொடங்குகின்றன. திலீபன் உண்ணா நோன்பை ஆரம்பித்த நாளான இன்று தொடக்கம், உயிர் துறந்த செப்ரெம்பர் 26ஆம் நாள் வரை தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யாழ்ப்பாணம்- நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் நடைபெறும் இந்த நிகழ்வினை, மாவீரர் ஒருவரின் தாயார் பொது தீபச்சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து திலீபனின் சகோதரன், அவரது படத்துக்கு முன்னே உள்ள தீபச்சுடரை ஏற்றி வைத்துள்ளார்.மேலும் அங்கு வந்திருந்தவர்களும் திலீபனின் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.குறித்த நிகழ்வில் முன்னாள் போராளிகள், உயிரிழந்த போராளிகளின் உறவுகள், ஜனநாயக போராளி கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *