Search
Sunday 25 June 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திருகோணமலை எம்.பிக்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அதிகரிக்க நடவடிக்கை

திருகோணமலை எம்.பிக்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அதிகரிக்க நடவடிக்கை
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அதிகரிப்பதற்கு  நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றபோதே, அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவித்தபோது,
திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக தலா 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுவதோடு, ஏனைய  மாவட்டங்களில்  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி அதிகமாக வழங்கப்படுகின்றது.
எனவே, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மாவட்டத்தின்  நிலமையைக் கருத்திற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
திருகோணமலையில் வன இலாகாவால் எல்லை இடப்பட்ட காணிகளுக்கான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. இதன் காரணமாக மக்கள் தங்களின்  காணிகளுக்குச் செல்லமுடியாது, தொழில் செய்யமுடியாது சிரமப்படுகின்றனர். எனவே,  அம்மக்களின் காணிப் பிரச்சினையைத் தீர்க்கப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றார்.
அரச தலைவரின், விசேட வேலைத்திட்டத்தின் மூலம் திருகோணமலைக்கு 1,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம்  பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. கடலரிப்பு மற்றும் கடல்நீர் ஊருக்குள் புகுவது தொடர்பான பிரச்சினையை எதிர்நோக்கும் திருகோணமலை நகரம் முதல் பத்தாம் குறிச்சி, வீரநகர், திருக்கடலூர், ஜமாலிய சல்லி ஆகிய பகுதிகள்வரை கல்வேலி அமைக்கப்படவுள்ளது.
n10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *