Search
Tuesday 7 April 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திருக்கேதீச்சர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தற்காலிக அலங்கார வளைவு

திருக்கேதீச்சர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தற்காலிக அலங்கார வளைவு

மன்னார் திருக்கேதீச்சர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மாந்தை திருக்கேதீச்சர வீதியில் தற்காலிக அலங்கார வளைவு கேதீச்சரம் சிவத் தொண்டர்களால் இன்று புதன்கிழமை காலை அமைக்கப்பட்டுள்ளது.திருக்கேதீச்சர நிர்வாகம் கடந்த 6ஆம் திகதி, சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஏற்கனவே வளைவு இருந்த இடத்தில் தற்காலிக வளைவு அமைப்பதற்கு நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக அனுமதி கோரியிருந்தனர்.அதற்கமைவாக மன்னார் மேல் நீதிமன்றத்தால் இன்று 19ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 23ஆம் திகதி வரையான 5 நாட்களுக்கு தற்காலிக வளைவு அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மன்னார் திருக்கேதிஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மாந்தை திருக்கேதீச்சர வீதியில் தற்காலிக அலங்கார வளைவானது கேதீச்சரம் சிவத் தொண்டர்களால் இன்று காலைமைக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் சிவராத்திரி தினத்தன்று உடைக்கப்பட்ட குறித்த அலங்கார வளைவு தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்ததமை குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *