Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திருநெல்வேலி சந்தையை பல குழுக்களாக வெவேறு இடங்களில் இயங்கவைக்க தீர்மானம்

திருநெல்வேலி சந்தையை பல குழுக்களாக வெவேறு இடங்களில் இயங்கவைக்க தீர்மானம்

யாழ்ப்பணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது நல்லூர் எல்லைக்குள் இருக்கும் திருநெல்வேலி சந்தைக்கு மக்கள் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் நேற்று புதன்கிழமை பிரதேச சபையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது பிரதான பொதுச் சந்தையான திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம் செய்யப்பட்டு பல குழுக்களாக வெவேறு இடங்களில் இயங்கவைக்க ஆவன செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்தார்.

விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களை தங்களின் இடங்களிலோ அவர்களது கிராமங்களிலோ விற்பனை செய்ய முடியும். பொதுமக்கள் திருநெல்வேலி சந்தைக்கு வரும் பாதைகளில் உள்ள மரக்கறி வியாபார நிலையங்களில் கொள்வனவுசெய்து எமக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.சந்தைக்கு வரும் வீதிகளில் பல இடங்களில் சந்தை வியாபாரத்தை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம். மக்கள் சந்தைக்கு வரும் வீதிகளில் உள்ள வியாபாரிகளிடம் மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய முடியும் என மேலும் தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *