Search
Wednesday 24 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தீவிர அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இன்று ஜனாதிபதி மைத்திரி ரணில் சந்திப்பு

தீவிர அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இன்று ஜனாதிபதி மைத்திரி ரணில் சந்திப்பு

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளை ஜனாதிபதி நிராகரித்துள்ளமையினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், இதையடுத்தே இன்று இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரி நேற்றைய தினம் கொழும்பில் இருக்கவில்லை. அவர் பொலன்னறுவை சென்றிருந்தமை காரணமாக இன்று இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.இன்று மாலை இடம்பெறவுள்ள சர்வ கட்சித்தலைவர்களுடனான சந்திப்பினை தொடர்ந்து அல்லது அதற்கு முன்னர் இருவரும் தனியாக சந்தித்து பேசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளை ஜனாதிபதி நிராகரித்துள்ளமையினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *