Search
Friday 23 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

துட்டகைமுனுவின் வாளை உருவி இனப்படுகொலை செய்வேன்: மேர்வின் சில்வா எச்சரிக்கை

துட்டகைமுனுவின் வாளை உருவி   இனப்படுகொலை செய்வேன்: மேர்வின் சில்வா எச்சரிக்கை

முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் மாறாக சிங்கள மக்களின் கால்களுக்கு தடைகளை ஏற்படுத்தி வீழ்த்துவதற்கு சூழ்ச்சி செய்தால் துட்டகைமுனு அரசனின் வாளை எடுத்து இனப்படுகொலைகளை செய்யவும் தயங்கப் போவதில்லை என்றும் மேர்வின் சில்வா எச்சரிக்கை செய்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் பேசுகையில்,

“தீவிரவாதிகளின் வழக்கை 07 நாட்களுக்குள் விசாரித்து அவர்கள் அரேபிய நாட்டை எதிர்பார்ப்பது போல, அந்நாட்டு சட்டத்தின்படியே தண்டனை வழங்க வேண்டும். கல்வீசி கொலை செய்ய வேண்டும். முதலாவது கல்லை நானே எறிவேன். சகலவிதமான அரேபிய மொழிகளிலுள்ள பதாதைகள், அறிவிப்புப் பலகைகளையும் அகற்றியெறிய வேண்டும். எம்மோடு இணைந்துள்ள முஸ்லிம் மக்களுடன் சேர்ந்து அவர்களை கல்லெறிந்து கொலை செய்ய வேண்டும். சஹ்ரானுடன் தொடர்புடைய முஸ்லிம் குழுக்களை அவர்கள் உருவாக்கினார்கள். என்னிடம் இவை குறித்த பல ஆதாரங்கள் உள்ளன என்பதை முன்னாள் ஜனாதிபதியும் அறிவார்.

சிறுபான்மையின மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தவும், அரசாங்கத்தைப் பாதுகாக்கவும், உளவுத் தகவல்களைப் பெறவும் அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தை இரண்டாகப் பிளவுபடுத்தவும் பல பிரிவுகளை அமைத்தார்கள். இவற்றுக்குப் பின்னால் ராஜபக்சவினரும், அமெரிக்கப் பிரஜை கோட்டாபயவுமே செயற்பட்டார்கள். அவர்களால் இல்லை என்று கூறமுடியாது.

‘முஸ்லிம் மக்கள் எம்மோடு இணைந்து செயற்பட முன்வர வேண்டும். மாறாக எங்களது கால்களுக்கு தடைகளை ஏற்படுத்தி வீழ்த்துவதற்கு சூழ்ச்சி செய்தால் துட்டகைமுனு அரசனின் வாளை எடுத்து இனப்படுகொலைகளை செய்யவும் தயங்கப் போவதில்லை. அமெரிக்காவில் சிவப்பிந்தியர்களைப் பாருங்கள் அவர்கள் தான் அமெரிக்காவின் உரிமையாளர்கள். அந்த நாடு எங்களுடையது என்பதை அறிவிக்க அவர்களுக்கு முதுகெலும்பில்லை. அவுஸ்திரேலியாவில் பழங்குடியினர் இன்று ஓரம்கட்டப்பட்டு புறந்தள்ளப்பட்டு இருக்கின்றனர். அவர்கள்தான் அவுஸ்திரேலியாவின் உரிமையாளர்கள். ஸ்ரீலங்காவின் உரிமையாளர்களான சிங்கள பௌத்தர்களாகிய நாங்கள் அப்படியொரு நிலைமைக்கு எங்களை தள்ளிவிட இடமளிக்க முடியாது. இதற்கு அனைத்து அரசியல்வாதிகளுமே பொறுப்புகூற வேண்டும். ஒரு அரசியல்வாதி கூட இது சிங்கள பௌத்த நாடு என்பதை கூறாமலிருக்கின்றனர். ஏன் அவர்களால் கூறமுடிவதில்லை? ஆனால் மேர்வின் சில்வா ஆகிய நான் அதனை எங்கு வேண்டுமானாலும் கூறுவேன்”.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *