Search
Wednesday 13 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி எடுக்கும் முயற்சி மனிதாபிமானமற்ற செயல்-வி. விக்னேஸ்வரன்

தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி எடுக்கும் முயற்சி மனிதாபிமானமற்ற செயல்-வி. விக்னேஸ்வரன்

தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி எடுக்கும் முயற்சி மனிதாபிமானமற்ற செயல் என்றும் இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு உண்மையில் கைதிகள் இது தொடர்பில் ஈடுபட்டார்களா? உண்மையான குற்றச்சாட்டுகள் நிறைவேற்றப்பட்டதா அல்லது அவர்கள் சட்ட சிக்கலுக்கு உள்ளாகி சந்தர்ப்ப சூழ்நிலையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனரா? இந்த விடயங்களைக் கூட பார்க்க வேண்டியுள்ளது என வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனின் ஊடக சந்திப்பு இன்றைய தினம் கோயில் வீதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது.இதன்போது கருத்து தெரிவித்த முதலமைச்சர் சட்டத்தின் பால் ஒரு மனித உயிரை எடுப்பதற்கு இந்த அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் 19வது அரசியல் யாப்பினை இல்லாது செய்வதாக தெரிவித்த கருத்து தொடர்பில் தனது கருத்தினை முன்வைத்தார், அத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டு இயக்கத்தினை கட்டி எழுப்பியதாகவும் பிரபாகரன் அவர்கள் ஒரு போதைப் பொருள் கடத்தல் காரர் என்று கூறிய கருத்து தொடர்பில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *