தலைப்பு செய்திகள்

தூக்கு மேடை தயாராகிறது!

தூக்கு மேடை தயாராகிறது!

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள தூக்கு மேடையை ஆராயும் நடவடிக்கையில் சிறைச்சாலைகள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தூக்கு மேடையிலுள்ள கயிற்றின் தரம் தொடர்பாக தரப்படுத்தல் குழுவின் ஊடாக ஆராயும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் அதன் தரத்தில் குறைபாடுகள் இருக்குமாக இருந்தால் புதிதாக வெளிநாட்டிலிருந்து கயிற்றை வரவழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மரண தண்டனை கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும் பதவியான அலுகோசு பதவிக்காக தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 45 வயதுக்குற்பட்ட சாதாரண தரப் பரீட்சையில் 2 பாடங்களில் சித்தியடைந்துள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக எதிர்வரும் 2 மாதங்களுக்குள் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *