Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தென்னாபிரிக்காவில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்தியாவிற்கு வாய்ப்பு- டிராவிட்

தென்னாபிரிக்காவில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்தியாவிற்கு வாய்ப்பு- டிராவிட்

தென்னாபிரிக்க மண்ணில் இந்தியா முதல்தடவையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்புள்ளது என இந்திய முன்னாள் வீரர் டிராவிட் தெரிவித்துள்ளார்
மிகவும் வலுவாக திகழும் இந்திய அணி தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது நாம் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா சிறந்த சகலதுறை வீரரான ஹர்திக் பாண்டயாவை அணியில் சேர்த்துள்ளது அதேபோன்று சிறந்த சுழல்பந்து வீச்சாளர்களும் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஏற்கனவே தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ளவர்கள் என்பதால் அது சாதகமான விடயமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்கள் 50 டெஸ்ட்களிற்கு மேல் விளையாடியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ள டிராவிட்ட தென்னாபிரிக்காவில் வெல்வதற்கு சற்று அதிஸ்டமும் மைதானத்தில் பச்சை புற்கள் அற்ற நிலையும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *