தலைப்பு செய்திகள்

தென்னாபிரிக்க மண்ணில் இலங்கை அணிக்கு வரலாற்று வெற்றி

தென்னாபிரிக்க மண்ணில் இலங்கை அணிக்கு வரலாற்று வெற்றி

தென்னாபிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்று இலங்கை அணி வரலாற்று சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளது.
இதன்படி தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரில் அந்த நாட்டு அணியை தோற்கடித்து வெற்றிப் பெற்ற முதலாவது ஆசிய நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.

இத்தொடரில் இதற்கு முன்னர் டர்பனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், குசல் ஜனித் பெரேராவின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் இலங்கை அணி 1 விக்கெட்டினால் திரில் வெற்றியை பதிவுசெய்தது.
இதனையடுத்து, 21ஆம் திகதி பேர்ட் எலிசெபத் மைதானத்தில் ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைதொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, வெறும் 154 ஓட்டங்களுக்கு சுருண்டது. 68 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 128 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இலங்கை அணிக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து, 197 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, குசல் மெண்டிஸ் மற்றும் ஒசே பெர்னான்டோவின் 163 ஓட்டங்கள் இணைப்பட்டத்தின் துணையுடன் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் மகத்தான வெற்றியை பெற்றதோடு, தென்னாபிரிக்காவை தோற்கடித்து வரலாற்று வெற்றி முத்திரை பதித்தது.
தென்னாபிரிக்கா மண்ணில் அவுஸ்ரேலியா, இங்கிலாந்துக்கு பிறகு டெஸ்ட் தொடரை கைப்பற்றிய அணியாக இலங்கை தனது பெயரை முத்திரை பதித்துக்கொண்டுள்ளது.-(3)

SA 1 SA 6 SA 9


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *