தலைப்பு செய்திகள்

தென்மராட்சி பிரதேசத்தில் மீள் குடியேற்ற அமைச்சினால் மலசலகூடங்கள்

தென்மராட்சி பிரதேசத்தில் மீள் குடியேற்ற அமைச்சினால்  மலசலகூடங்கள்

தென்மராட்சி பிரதேசத்தில் வேள்ட் விஸன் லங்கா நிறுவனத்தினரால் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராம அலுவலர்கள் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய கிராம அலுவலர் பிரிவுகளில்மீள் குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 60 பயனாளிகளுக்கு மலசலகூடங்கள் அமைத்து வழங்கப்படவுள்ளதாக பிரதேச செயலகத்தினர் தெரிவித்தனர். மலசலகூடங்கள் அவசியம் என இனங்காணப்பட்ட 60 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அந்தக் குடும்பங்களுக்கு மலசலகூடங்கள் அமைத்து வழங்கப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.
குறித்த பிரதேசத்தில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் மலசலகூடங்கள் இல்லாத நிலையில் அருகில் உள்ள பற்றைகளில் தமது இயற்கைக் கடன்களை மேற்கொண்டு வருவதாகவும், அவர்களில் அவசியம் என இனங்காணப்பட்ட 60 குடும்பங்களுக்கு மலசலகூடங்கள் அமைக்கப்படவுள்ளதெனவும் தெரிவித்தனர்.
இதேவேளை இப் பிரதேசத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள சில கிராமங்கள் வேள்ட் விஸன் லங்கா நிறுவனத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *