செய்திகள்

தெரிவுக்குழுவில் முன்னிலையாகின்றார் தயாசிறி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு இன்று புதன்கிழமை மீண்டும் கூடுகின்றது.அந்தவகையில் பிற்பகல் 2 மணியளவில் தெரிவுக்குழுவில் சாட்சியங்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் சாட்சியம் வழங்குவதற்காக, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க முன்னிலையாகவுள்ளதாக சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சபாநாயகர் வழங்கிய தெளிவுபடுத்தலை அடுத்து தெரிவுக் குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கத் தயாராக இருப்பதாக இன்று தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க மாட்டேன் என தெரிவித்துவந்த தயாசிறி ஜயசேகர நேற்றும் இந்த விடயம் குறித்தும் நாடாளுமன்றில் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(15)