Search
Monday 26 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தெரிவுக்குழுவுக்கு முன் நாலக சில்வா சாட்சியம்

தெரிவுக்குழுவுக்கு முன் நாலக சில்வா சாட்சியம்

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு பொறுப்பாகவிருந்த முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா இன்று சாட்சியமளித்தார்.
இரண்டரை மணித்தியாலம் அவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6 மணி வரையில் அவர் சாட்சியமளித்தார்.
சஹரானை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாகவும் இதற்காக நீதிமன்றத்தினூடாக பிடியாணையை பெற்றுக்கொண்டிருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தான் கைது செய்யப்பட்ட பின்னர் அது தொடர்பான நடவடிக்கைகள் இல்லாது போயுள்ளதாக தான் என்னுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வு எதிர்வரும் 6ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *