Search
Monday 22 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தெரிவுக்குழுவுக்கு முன் செல்ல வேண்டும் : தயாசிறிக்கு சபாநாயகர் அறிவிப்பு

தெரிவுக்குழுவுக்கு முன் செல்ல வேண்டும் : தயாசிறிக்கு சபாநாயகர் அறிவிப்பு

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர செல்ல வேண்டுமென சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் தயாசிறிக்கு இந்த அறிவிப்பை விடுத்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராயும் தெரிவுக்குழுவுக்கு வருமாறு தனக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள போதும் தான் அதில் கலந்துக்கொள்ள மாட்டேன் எனவும் நீதிமன்றத்தில் அது தொடர்பாக வழக்கு விசாரணை நடப்பதால் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பிரச்சினைகள் காணப்படுவதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இதன்போது பதிலளித்த சபாநாயகர் தெரிவுக்குழு விடயத்தில் தன்னால் தலையிட முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு ஆரம்பிக்க முன்னரே தெரிவுக்குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தெரிவுக்குழுவை நிறுத்த முடியாது. இதில் நீங்கள் சாட்சியமளிக்க செல்ல வேண்டும். என சபாநாயகர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *