Search
Wednesday 19 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தெரிவுக்குழு சர்ச்சையால் அமைச்சரவை கூட்டத்தை இரத்து செய்தார் மைத்திரி

தெரிவுக்குழு சர்ச்சையால் அமைச்சரவை கூட்டத்தை இரத்து செய்தார் மைத்திரி

தனது உத்தரவையும் மீறி பாராளுமன்ற தெரிவுக்குழுவை இன்று கூட்ட தீர்மானித்துள்ள நிலையில் ஜனாதிபதி வாராந்தம் நடத்தும் அமைச்சரவை கூட்டத்தை இன்று நடத்தாது இருப்பதற்கு நடவடிக்கையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி இது தொடர்பாக அமைச்சர்களுக்கு அறிவித்திருந்ததுடன் தெரிவுக்குழுவை இரத்துச் செய்யாவிட்டால் அமைச்சரவையை கூட்டவோ அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கவோ மாட்டேன் என தெரிவித்திருந்தார்.
ஆனபோதும் அவரின் உத்தரவையும் தாண்டி இன்று தெரிவுக்குழு கூடவுள்ள நிலையில் அவர் அமைச்சரவை கூட்டத்தை இரத்த செய்வதற்கு நடவடிக்கையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *