Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தெரிவுக்குழு நியமனத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பு

தெரிவுக்குழு நியமனத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பு

நாடாளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு கூடியது. இதன்போது தெரிவுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து சபாநாயகர் அறிவித்தார். அதன்படி, ஐக்கிய தேசிய முன்னணியில் 5 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 5 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தலா 1 உறுப்பினருமாக தெரிவுக் குழுவில் இடம்பெறுவர் என சபாநாயகர் அறிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு 7 பேரின் பெயர் சமர்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஐவர் மாத்திரமே தெரிவுசெய்யப்பட்ட நிலையில், அது தொடர்பில் சர்ச்சை கிளம்பியது. அதனை தொடர்ந்து ஆளுந்தரப்பு சபையிலிருந்து வெளியேறியது.அதனை தொடர்ந்து ஐ.தே.க.-யின் கோரிக்கைக்கு அமைய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, 121 பெரும்பான்மை வாக்குகளுடன் தெரிவுக்குழு நியமனம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து தெரிவுக்குழு நியமனத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.அதன்படி, அடுத்த நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு கூட்டப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *