Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் சாட்சியம்

தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் சாட்சியம்

தேசிய பாதுகாப்பு சபை கூட்டம் கடந்த ஒக்டோபர் மாதத்தின் பின்னர் 4 தடவைகள் கூடியுள்ள போதும் அதில் சஹரான் தொடர்பாகவோ தேசிய தௌஹீத் ஜமாத் தொடர்பாகவோ எதுவும் பேசப்படவில்லையெனவும் அதில் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் பெரியளவில் கலந்துரையாடப்பட்டிருக்கவில்லையெனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு முன்னிலையில் இன்றைய தினம் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தான் பாதுகாப்பு செயலாளராக பதவியேற்ற பின்னர் நவம்பர் , டிசம்பர் , ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 4 தடவைகள் பாதுகாப்பு சபை கூட்டப்பட்டுள்ளதாகவும் இதன்போது பிரதமரோ , பொலிஸ் மா அதிபரோ மற்றும் பாதுகாப்பு இராஜங்க அமைச்சரோ அழைக்கப்படவில்லையெனவும் அவர்களை அழைக்க வேண்டாமென ஜனாதிபதியே தெரிவித்திருந்தாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தான் பாதுகாப்பு செயலாளராக இருந்தாலும் கோதாபய ராஜபக்‌ஷ போன்று தான் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லையெனவும் ஜனாதிபதியை சந்திப்பதற்கே தனக்கு கடினமானதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புலனாய்வு விடயங்களை ஜனாதிபதிக்கு அரச புலனாய்வு அதிகாரி வழங்குவதால் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான புலனாய்வு அறிக்கை முன் கூட்டியே கிடைத்திருந்த போதும் ஜனாதிபதிக்கு அதுபற்றி அரச புலனாய்வு அதிகாரி கூறியிருப்பார் என நினைத்துக்கொண்டு தான் கூறியிருக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *