Search
Tuesday 23 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தெரிவு குழுவுக்கு முன் ரிஷாத் வந்த போதும் சாட்சி விசாரணை வெள்ளி வரை ஒத்தி வைக்கப்பட்டது

தெரிவு குழுவுக்கு முன் ரிஷாத் வந்த போதும்  சாட்சி விசாரணை வெள்ளி வரை ஒத்தி வைக்கப்பட்டது

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதின் இன்று அழைக்கப்பட்டிருந்த போதும் அவரிடம் சாட்சியங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மாலை அவர் தெரிவுக்குழுவுக்கு முன்னால் அழைக்கப்பட்டிருந்தமைக்கமைய அவர் அங்கு சென்றிருந்த போதும் தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் சிலர் முக்கிய கூட்டங்களுக்கு சென்றிருந்தமையினால் அவரிடம் சாட்சியத்தை வேறு நாளொன்றில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அவரை வெள்ளிக்கிழமை அவரை வருமாறு குழுவினர் தலைவர் அறிவித்தார். இதனை ஏற்று ரிஷாத் பதியூதின் அங்கிருந்து சென்றுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *