ஒரு வகை தெள்ளூப்பூச்சி பரவியதன் காரணமாக அட்டன் கல்வி வலயத்தில் மூடப்பட்டிருந்த என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தீடிரென ஒரு வகை தெள்ளூப்பூச்சிகள் குறித்த பாடசாலையின் கட்டிடத்துக்குள் நுழைந்ததன் காரணமாக கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டது.
இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் முன்கூட்டியே மாணவர்களுக்கு விடுமுறை வழங்கியுள்ளது.
இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுடைய பெற்றோர்களின் உதவியை கொண்டு பாடசாலை நிர்வாகம் தெள்ளூப்பூச்சிகளை ஒழிப்பதற்காக மருந்து வகைகளை பிரயோகித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து 05.05.2016 அன்று பாடசாலை மூடப்பட்டதுடன் 06.05.2016 அன்று வழமைபோல் பாடசாலை கல்வி நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலய அதிபர் தெரிவித்தார்.
n10