தலைப்பு செய்திகள்

தேசிய போதை ஒழிப்பு வார நிகழ்வுகள்

தேசிய போதை ஒழிப்பு வார நிகழ்வுகள்

தேசிய போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றுவருகின்றன.

இலங்கையில் போதைவஸ்த்து பாவனை அதிகமாகவுள்ள மாவட்டங்களில் ஒன்றான மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

போதைப்பொருளை ஒழித்து வாழ்வதற்கான சிறந்த சூழலை உருவாக்கும்வோம் என்னும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம் ஆகியன இணைந்து மட்டக்களப்பு நகரில் கவன ஈர்ப்பு பேரணி ஒன்று நடாத்தப்பட்டதுடன் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் நடாத்தப்பட்டது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் புளியந்தீவு வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு அருகில் இருந்து பேரணி நடைபெற்று காந்தி பூங்காவரையில் அந்த பேரணி நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் இந்த பேரணி நடைபெற்றதுடன் பேரணியில் கலந்துகொண்டோர் போதைவஸ்து பாவனைக்கு எதிரான பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து காந்தி பூங்கா முன்றிலில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றும் நடாத்தப்பட்டது.இதன்போது போதையொழிப்பு வாரத்தினை முன்னிட்டு கொடி விற்பனையும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.இந்த போராட்டத்தில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் போதையொழிப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் ஆரம்பித்துவைதக்கப்பட்டது.

மாவட்ட வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் கே.குணரெட்னம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.

“நாளாந்தம் மரணிக்கும் சுமார் 60பேருக்கு பதிலாக 80பேரையாவது புதிதாக பழக்குவதே சிகரட் கம்பனிகளின் முயற்சியாகும்.அவதானமாக இருங்கள்,அவர்களின் அடுத்த இலக்கு உமது குழந்தைகளே” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் இதன்போது வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் ஒட்டப்பட்டன.IMG_0088 IMG_0091 IMG_0093 IMG_0106

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *