Search
Thursday 21 November 2019
  • :
  • :

தேசிய மட்ட கிரிக்கெட் வீரர்களிடம் போதைப் பொருள் பரிசோதனை

தேசிய மட்ட கிரிக்கெட் வீரர்களிடம் போதைப் பொருள் பரிசோதனை

தேசிய மட்டத்திலுள்ள கிரிக்கெட் வீரர்களை விசேட போதைப் பொருள் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ள மாகாண கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் இந்த பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
யாரேனும் வீரர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதிப்படுத்தப்படுமாக இருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.
டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலேயே போதைப் பொருள் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *