Search
Friday 14 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தேர்தலில் யார் வென்றாலும் அரசியலில் நிச்சயமற்ற நிலை நீடிக்கும்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் எவர் வெற்றிபெற்றாலும் அடுத்த சில மாதங்களுக்கு நாட்டின் அரசியல் நிலை நிச்சயமற்றதொன்றாகவே காணப்படும் என ரொய்ட்டர் செய்திச்சேவை எதிர்வு கூறியுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு வெற்றிகிட்டுமென்றால், அது சிறிய வித்தியாசயத்திலேயே கிடைக்கும், அவரது ஆட்சி குறித்து மக்களுக்கு உள்ள கசப்புணர்வே காரணம்,
அவ்வாறு அவர் வெற்றி பெற்றாலும் தற்போதைய கட்சித்தாவல்கள் காரணமாக பலவீனமானவராகNவு காணப்படுவார்,அவரால் தான் நினைத்ததை செய்;ய முடியாது, அவரது கட்சியே அவரை கேள்வி கேட்க்கும்,உறுதியான அரசியல் பொருளாதார தீர்மானங்களை அவரால் எடுக்க முடியாது என்றும் ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

மிகச்சமீப காலம் வரை இவ்வாறான நிச்சயமற்ற நிலை தோன்றும் என எவரும் எதிர்வு கூறியிருக்க மாட்டார்கள்,ஆகக் குறைந்தளவில் மகிந்த ராஜபக்சவும் இதனை எதிர்பார்த்திருக்க மாட்டார்.தனக்கான ஆதரவு குறைவடைகின்ற போதிலும் தானே வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையிலேயே அவர் முன்கூட்டியே தேர்தலை நடத்த திட்டமிட்டார்.
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரும் நிச்சயமற்ற நிலை காணப்படும் என்பதே முதலீட்டாளர்களின் கவலையாக காணப்படுகின்றது.
யர்h தோற்றாலும்,அவர் மீண்டெழுந்து போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை அடுத்த சில மாதங்களில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் வழங்குகின்றது என குறிப்பிட்டுள்ள இலங்கை குறித்த ஆய்வாளர் அலன் கீனன் அடுத்த பல மாதங்களுக்கு இலங்கை பதட்டமானதாக காணப்படப்போகின்றமை நிச்சயம் எனதனது புளொக்கில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை எந்த வேளையில் நடத்தினால் ராஜபக்ச வெற்றிபெறுவார் என அவருக்கு ஆலோசனை வழங்கிய ஜோதிடரின் கணிப்புகள் பொய்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் மேற்குலக நாடுகள் காத்திருக்கின்றன.
மனித உரிமை மற்றும் சீனாவுடனான நெருக்கம் காரணமாக மேற்குலகிற்கும் இலங்கைக்கும் இடையில் பாதிப்படைந்துள்ள உறவுகளை மைத்திரிபால சிறிசேனா வெற்றிபெற்றால் சீர்செய்வார் என ராஜதந்திரிகள் எதிர்பார்க்கின்றனர்.
சிறிசேன சிங்களபௌத்தர்களுக்கும், சிறுபான்மை இனத்தவர்களுக்குமிடையிலான பதட்டத்தை சரிசெய்வார்,எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். வழமையாக தமக்குள் பிளவுபட்டு நிற்கும் எதிiணியின் வேட்பாளராக மாத்திரம் அவர் இல்லாமல் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் முக்கிய தமிழ்கட்சி மற்றும் மகிந்த ராஜபக்சவிடமிருந்து பிரிந்த முஸ்லீம்கட்சிகள் ஆதரிக்கும் வேட்பாளராக அவர் காணப்படுவதும் அதற்கு காரணம்.
விடுதலைப்புலிகளை 2009 ம்ஆண்டு தோற்கடித்ததன் மூவமாக தனது அரசியல் எதிர்காலத்தை பலப்படுத்திய ஜனாதிபதி, சிறிசேனவை துரோகி என சித்தரிக்க முயகின்றார்.
ராஜபக்சவை விட சிறிசேன தமிழ்மக்களுடன் நல்லிணக்கத்திற்கு தயாராக இருந்தாலும் தான் யுத்தகுற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை மகிந்த ராஜபக்ச போன்றே எதிர்ப்பார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
ராஜபக்ச முதன்முதலில் தெரிவு செய்யப்பட்ட 2005 ம் ஆண்டிலிருந்து இலங்கையின் பொருளாதாரம் 6.8 வீத வளர்ச்சியை கண்டுள்ளது.வெளிநாட்டுக்கடன்கள் குறைவடைந்துள்ளன.பணவீக்கமும் குறைவடைந்துள்ளது.
அதேவேளை இலங்கையின் பொருளதாரம் சீனாவில் தங்கியிருக்கும் ஒன்றாகவும் மாறியுள்ளது.ஏனைய வெளிநாட்டு முதலீட்டாள ர்கள் விலகிநிற்கின்றனர்.
எனினும் இந்த முரண்பாட்டிற்கு காரணம்,இலங்கையின் பொருளாதர நிலை வலுவாகவுள்ளது என சித்தரிப்பதற்காக அரசாங்கம் பொருளாதரா சுட்டிக்களை தனது தேவைக்கு ஏற்ற விதத்தில் மாற்றுவதுதான் என்கின்றனர் ஆய்வாளர்களும், எதிரணி அரசியல்வாதிகளும்.
கிரேக்கத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் உண்மையான புள்ளிவிபரங்கள் மக்களுக்கு தெரியவந்தன, நாங்கள் மக்களுக்கு உண்மையான புள்ளிவிபரங்களை வெளிப்படுத்துவோம்,என்கிறார் எதிர்கட்சியின் ஹர்சா டி சில்வா என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *