Search
Thursday 20 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி : இன்று மாலை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லப்படும்

தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி : இன்று மாலை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லப்படும்

நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகள் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளையும் பூர்தி செய்யப்பட்டுள்ளன.
நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை 25 மாவட்டங்களிலும் 13,374 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெறவுள்ளதுடன் இதற்காக ஒரு இலட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இன்று மாலை சகல வாக்களிப்பு நிலையங்களுக்குமான பணியாளர் குழுவினரும் வாக்குப் பெட்டிகளும் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலிருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளன. இதன்போது சிரேஷ்ட அதிகாரிகளும் ஆண் உத்தியோகத்தர்கள் அனைவரும் கட்டாயம் இன்றைய தினம் மாலையில் அந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்றுவிட வேண்டும் என்பதுடன் பெண் உத்தியோகஸ்தர்கள் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அறிக்கையை பதிவு செய்துவிட்டு தேர்தல் நடைபெறும் தினத்தன்று கடமைக்கு சமூகமளிக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான பொலிஸார் இன்றைய தினம் அந்தந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதன்படி வாக்களிப்பு நிலையங்களில் 26,748 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதற்கு மேலதிகமாக நாடு பூராகவும் தேர்தல் நேர பாதுகாப்பு கடமைகளுக்காக 40,000 பேர் வரையிலான பொலிஸாரும் , விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *