Search
Thursday 9 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தேர்தலுக்கு எதிரான மனுக்களை விசாரிப்பதா? இல்லையா? : தீர்ப்பு நாளை

தேர்தலுக்கு எதிரான மனுக்களை விசாரிப்பதா? இல்லையா? : தீர்ப்பு நாளை

பாராளுமன்ற தேர்தலை ஜுன் 20ஆம் திகதி நடத்த எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதா? இல்லையா? என்பது தொடர்பான அறிவித்தலை நாளை வெளியிடவுள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாளை பிற்பகல் 3 மணிக்கு இது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படுமென பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுக்கள் 10 ஆவது நாளாக இன்று ஆராயப்பட்ட போதே நீதிமன்றத்தினால் இவ்வாறாக தெரிவிக்கப்பட்டள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *