Search
Sunday 12 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தேர்தல் மேடைகளில் அதிகரித்துச் செல்லும் இனவாத , வெறுப்புணர்வு பேச்சுகள் : கபே எச்சரிக்கை

தேர்தல் மேடைகளில் அதிகரித்துச் செல்லும் இனவாத , வெறுப்புணர்வு பேச்சுகள் : கபே எச்சரிக்கை

ஜனாதிபதி தேர்தல் பிரசார மேடைகளில் வெறுப்புணர்வு மற்றும் இனவாத பேச்சுக்கள் அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிவதாகவும் இந்த நிலைமை தொடர்ந்தால் இது வன்முறைகளுக்கு இட்டு செல்லலாம் எனவும் தேர்தல் கண்கானிப்பு அமைப்பான சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அந்த இயக்கத்தின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளின் போது வெறுப்புணர்வு பேச்சுக்களின் அதிகரிப்பை அவதானிக்க முடிகின்றது. சில வேட்பாளர்கள் சமூக வலைத்தளங்களினூடாக தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பதிலாக எதிர்தரப்பு வேட்பாளரை அபகீர்த்திக்குள்ளாக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இதன்போது வெறுப்புணர்வு மற்றும் இனவாதத்தை அடிப்படையாக கொண்ட பேச்சுக்களும் அதிகரித்துள்ளன. இந்த நிலைமை மேலும் அதிகரிப்பதனூடாக வன்முறைகள் ஏற்படக் கூடிய அபாயமும் காணப்படுகின்றது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *