இலங்கை அணியை 8 விக்கெட்டுகளால் தோற்கடித்து இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது.
மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று விசாகபட்டினத்தில் நடைபெற்றது.
இதன்போது நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 215 ஓட்டங்களை பெற்றது.
இதனை தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 32.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ஓட்டங்களை பெற்று வெற்றிப் பெற்றுள்ளது.
இதன்படி தொடரில் 2/3க்கு என்ற ரீதியில் இந்தியா வெற்றிப் பெற்றுள்ளது. -(3)

Previous Postநாமலை நாட்டின் தலைவராக்க முயற்சிக்கும் மகிந்த
Next Postஹப்புத்தளையில் இ.தொ.காவின் மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி