Search
Saturday 7 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தொடர் இன்னமும் முடிவிற்கு வரவில்லை- தினேஸ் சந்திமல்

தொடர் இன்னமும் முடிவிற்கு வரவில்லை- தினேஸ் சந்திமல்

இந்தியாவுடனான தொடர் இன்னமும் முடிவிற்கு வரவில்லை என தெரிவித்துள்ள இலங்கை அணித்தலைவர் தினேஸ் சந்திமல் அணித்தலைவர் என்றஅடிப்படையில் நான் தோற்பதை விரும்பவில்லை, எந்த அணியாகயிருந்தாலும் நான் வெற்றியையே விரும்புகின்றேன்,நாங்கள் முழு முயற்சியுடன் விளையாடுகின்றோம் ஆனால் போட்டியின் முடிவை எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளா.
இலங்கை இந்திய அணிகளிற்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கண்டியில் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோற்ற அழுத்தம் உள்ளது ,ஆனால் நாங்கள் இன்னமும் சிறந்த அணியே இந்த டெஸ்டை வெல்வதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம்,எங்களால் அதனை சாதி;;க்க முடியுமென்றால் எங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாங்கள் முன்னோக்கி செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா அணிவீரர்களிற்கு ஆற்றிய உரைக்கு பின்னர் அணி வீரர்கள் புதிய நம்பிக்கையுடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் இனிங்ஸில் சிறப்பாக விளையாடவேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *