Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தொண்டமானின் உடல் அக்கினியுடன் சங்கமமானது

தொண்டமானின் உடல் அக்கினியுடன் சங்கமமானது

காலஞ்சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியை பூரண அரச மரியாதையுடன் நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பலத்த பாதுகாப்புடன் கொட்டகலையிலிருந்து ஹட்டன் டிக்கோயா வழியாக நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டு அரங்கிற்கு கொண்டுவரப்பட்ட அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பெருந்திரளான பொதுமக்கள் வீதியின் இரு மருங்கிலும் சுகாதார இடைவெளியை பேணி மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலியை செலுத்தினர்.
இதன்பின்னர் அங்கு இறுதிக்கிரியைகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பந்துல குணவர்தன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் முன்னாள் ரவூப் ஹக்கீம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் வி. இராதகிருஸ்ணன், முன்னாள் அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜி.எல்.பீரிஸ் ,பாராளுமன்ற உறுப்பினர்களான நவீன் திசாநாயக்க, சி.பி ரத்நாகக்க, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
இறுதிக்கிரியை நடத்தப்பட்ட மைதானத்திற்குள் குறிப்பிட் எண்ணிக்கையிலானோரே அனுமதிக்கப்பட்டிருந்தனர். -(3)1 2 3 4 45

Photo (3) Photo (5) Photo (1) Photo (2) Photo (4)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *