Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தொண்டமானின் கனவை நனவாக்க கொட்டகலையில் தேசிய பல்கலைக்கழகம் அமையும் : பந்துல

தொண்டமானின் கனவை நனவாக்க கொட்டகலையில் தேசிய பல்கலைக்கழகம் அமையும் : பந்துல

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவு நாளன்று கொட்டகலையில் தேசிய பல்கலைக்கழகத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துலகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஆறுமுகன் தொண்டமானின் கனவுகளில் ஒன்று நுவரெலியாவில் தேசிய பல்கலைக்கழகமொன்று அமைக்க வேண்டும் என்பதாகும். இதன்படி அவர் அதற்கான கலந்துரையாடல்களை கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தார். இவரின் கனவை நனவாக்கும் வகையில் அடுத்த வருடத்தில் அவரின் ஓராண்டு நினைவு நாளன்று கொட்டகலையில் அந்த திட்டம் ஆரம்பமாகும் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *