தலைப்பு செய்திகள்

தொண்டமானை கண்டாலே ஒருவருக்கு பயம் ஏற்படுகின்றது : சபையில் கூறிய முத்து

தொண்டமானை கண்டாலே ஒருவருக்கு பயம் ஏற்படுகின்றது : சபையில் கூறிய முத்து

இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானை கண்டால் சிலருக்கு பயம் ஏற்படுவதாக அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே முத்துசிவலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ன செய்துள்ளது என சிலர் கேட்கின்றனர். ஏன் இந்திய வம்சவளியினருக்கு பிரஜா உரிமைகளை பெற்றுக்கொடுத்தோம் , வீட்டுத்திட்டங்களை பெற்றுக்கொடுத்தோம் , ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொடுத்தோம் , தோட்டங்களுக்கு மின்சாரத்தை பெற்றுக்கொடுத்தோம். இது போன்று பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
ஒருவர் ஆறுமுகன் தொண்டமானின் கண் சிவப்பாக இருப்பதாக கூறுகின்றார். உலகம் பூராவும் வெப்பம் அதிகரித்துள்ளதால் அவ்வாறு கூறுபவரின் கண்ணையும் பரிசோதிக்க வேண்டும். தொண்டமானை கண்டாலே அவருக்கு பயம் வருகின்றது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *