Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தொண்டமான் தரப்பினர் சுகாதார பணிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்ததாக குற்றச்சாட்டு

தொண்டமான் தரப்பினர் சுகாதார பணிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்ததாக குற்றச்சாட்டு

காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தரப்பை சேர்ந்த ஒருவர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜாசிங்கவுக்கு தொலைபேசி மூலம் அழுத்தம் கொடுத்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவர்கள் தொண்டமானின் பூதவுடலுடன் பல பிரதேசங்களுக்கு சென்று நடத்திய அஞ்சலி நிகழ்வுகளின் போது கொரோனா தடுப்பு தொடர்பான சுகாதார ஆலோசனைகளை முறையாக பின்பற்றவில்லையெனவும் இவ்வாறான நிலைமையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் இருந்திருந்தாலும் அடுத்த கொரோனா அலைக்கு அது காரணமாக அமையுமெனவும் இதனால் அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் அந்த சங்கம் தெரிவித்தள்ளது.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தலைவர் எம்.ஜீ.உபுல் ரோஹனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறாக குறிப்பிடப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *