Search
Sunday 29 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தொண்டா – திகா சகாக்கள் இடையே நோர்வூட்டில் மோதல் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதி இரண்டு வாகனங்கள் சேதம்.

தொண்டா – திகா சகாக்கள் இடையே நோர்வூட்டில் மோதல் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதி இரண்டு வாகனங்கள் சேதம்.

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நகருக்கு அருகாமையில் 28.03.2018 அன்று மாலை இருகட்சிகளின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.01 (3)

இந்த இரு கட்சி ஆதரவாளர்களின் மோதலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களும் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த மோதல்களுக்கு மஸ்கெலியா பிரதேசபையில் தலைவர் தெரிவில் ஏற்பட்ட முறுகல் நிலையே தொடர்ந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.01 (1)

இந்த மோதல் சம்பவத்தில் இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களும் கல்வீச்சுக்குள்ளாகி காயமடைந்து இருப்பதாகவும் அவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.DSC01855

இந்த கல்வீச்சு காரணமாக மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் அவர்களின் வாகனமும், இம் முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நோர்வூட் பிரதேச சபைக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் தெரிவான பா.சிவநேசன் அவர்களின் வாகனமும் சேதமடைந்துள்ளன.DSC01856

குறித்த சம்பவம் குறித்து 28.03.2018 அன்று மாலை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.DSC01858

மோதலின் பின் நகரில் மற்றும் ஏனைய பகுதிகளில் பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினரின், பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.Pho (1)

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.Photo (1) Photo (5)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *