Search
Friday 24 November 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தொழிநுட்ப கோளாறு: 138 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஶ்ரீ லங்கன்

தொழிநுட்ப கோளாறு: 138 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஶ்ரீ லங்கன்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மும்பை நோக்கி பறந்த ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானமொன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக அவசரமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
யூ-எல் 141 என்ற விமானமே இவ்வாறாக தரையிறக்கப்பட்டதுடன் இதன்போது இதில் 138 பயணிகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு 11.47 மணியளவில் மும்பாய் நோக்கி பயணித்த இந்த விமானம் இரண்டு மணித்தியாலங்கள் கழித்து மீண்டும் கட்டுநாயக்கவில்லை தரையிறக்கப்பட்டதுடன் பின்னர் அதிலிருந்த பயணிகள் இன்று அதிகாலை வேறு விமானமொன்றின் மூலம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *