Search
Saturday 20 October 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தொழிற்சங்க பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும்! பிரதமர் அலுவலகம் அறிக்கை

தொழிற்சங்க பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும்! பிரதமர் அலுவலகம் அறிக்கை

தொழிற்சங்கள் சில ஆரம்பித்துள்ள திடீர் வேலைநிறுத்தம் வரலாற்றில் கரும்புள்ளியாக அடையாளப்படுத்த முடியும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் பணியாளர் சபையின் முக்கியஸ்தரும் அமைச்சருமான சாகல ரத்நாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் தொழிற்சங்கம் சில எடுத்து காட்டியுள்ள விடயம் எதுவுமல்ல தொழிற்சங்க பயங்கரவாதம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணியை நிறைவு செய்து வீடுகளுக்கு செல்லும் ஆயிரம் பயணிகளும் பரிட்சையில் தோற்றும் பரீட்சாத்திகளும் இந்த திடீர் வேலைநிறுத்தத்தினால் சங்கடங்களுக்கு உள்ளாகியிருந்தனர். நேற்றைய தினம் தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கை உண்மையான தொழிற்சங்க நடவடிக்கை அல்ல தொழிற்சங்க பயங்கரவாதமே ஆகும் அதாவது தொழிற்சங்கங்களின் குறுகிய நோக்கம் சமூகத்தின் அனைத்திலும் பார்க்க உயர்வாக கருதப்படும் தமது தேவையை தவிர்ந்த ஏனைய சிலரின் தேவைகள் விருப்புக்கள் முக்கியமானதில்லை என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மையாகும். எமது நாடு என்ற ரீதியில் ஒன்றிணைந்து 30 வருடகாலமாக நாட்டை சீர்குலைவுக்கு உற்படுத்திய பிரிவினைவாத பயங்கரவாதத்தை தோற்கடித்த வகையில் இந்த தொழிற்சங்க பயங்கரவாதத்தை ஆரம்பத்திலே தோற்கடிப்பதற்கு காலம் ஏற்பட்டுள்ளது.
பாரம்பரிய மற்றும் தர்ம கட்டமைப்புக்குள் தமது நடவடிக்கைகளை இடம்பெறவேண்டும். நீண்ட பணிகளுக்கு பின்னர் வீடுகளுக்கு செல்லும் பயணிகள் மற்றும் தமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் பரீட்சைக்கு தொற்றியுள்ள மாணவர்களில் தலையில் துப்பாக்கியை வைத்து தமது கோரிக்கையை நிறைவேற்றுமாறு கோருவது எந்த வகையில் சம்பிரதாய மரபுகளுக்கு உட்பட்டதல்ல. வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்களின் இறுதி தந்திரோபாயகாக அமைய வேண்டும் அத்தோடு எந்த வகையிலும் தாம் கொண்டுள்ள முதலாவது ஆயுதமாக பயன்படுத்த கூடாது.
அதனை அடுத்திருந்த ரயில் பயணிக்கல் மேற்கொண்ட எதிர்ப்பு மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதன் அடிப்படையில் நாம் உணரவேண்டும் அவர்களுடைய ஆத்திரம் வெறுப்புகளை புரிந்து கொள்ள கூடியதாக இருந்தாலும் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் பொதுமக்களை போன்று ஆர்ப்பாட்டக்காரர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அவர்கள் பாதுகாப்பாக வீடுகளை நோக்கி செல்வதற்கும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொலிஸ் அதிரடை படையை பயன்படுத்தி இந்த பதற்ற நிலையை கட்டுப்படுத்துவதற்கு அதிகூடிய கவனத்தை மேற்கொள்வது இந்த விடையங்களை அடிப்படையாக கொண்டே ஆகும்.
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக எமது அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பலவீனமாக கருதக்கூடாது என்று கருத கூடாது அத்தோடு இந்த தொழிற்சங்க பயங்கரவாதத்தை தோற்கடித்து மக்கள் வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கு நாம் கூடுதலான வகையில் அர்பணிப்போம் என வலியுறுத்துகிறோம். இதற்காக அரசாங்கத்திற்கு ஆக கூடிய ஒத்துழைப்பை வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *