Search
Monday 16 September 2019
  • :
  • :

தோட்டத் தொழிலாளர்களின் 50ரூபா சம்பள அதிகரிப்பு விவகாரம் : அமைச்சரவையில் வாக்குவாதம்

தோட்டத் தொழிலாளர்களின் 50ரூபா சம்பள அதிகரிப்பு விவகாரம் : அமைச்சரவையில் வாக்குவாதம்

தோட்டத் தொழிலாளர்களுக்காக 50 ரூபா சம்பள அதிகரிப்பு விடயம் தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைச்சர்கள் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர்களான மனோகணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோர் தோட்டத் தொழிலாளர்களுக்கு குறித்த 50 ரூபா அதிகரிப்பை வழங்குவதில் இன்னும் தாமதிப்பது தொடர்பாக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த ஒக்டோபர் மாதம் முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டுமென போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் முதலாளிமார் சம்மேளனத்தினர் அவர்களுக்கு 750 ரூபா வரையில் சம்பளத்தை வழங்குவதற்கு இணங்கியிருந்தனர். இதனை தொடர்ந்து அரசாங்கத்தின் உதவியுடன் 50ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டிருந்தது. அதனை மே மாதம் முதல் வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டிருந்தது. ஆனாலும் இன்னும் அந்த தொகை வழங்கப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *