Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 50ரூபா கிடைக்கப் போகிறது?

தோட்டத் தொழிலாளர்களுக்கு 50ரூபா கிடைக்கப் போகிறது?

பெருந்தோட்டத்துறை அமைச்சின் ஊடாக இலங்கை தேயிலை சபைக்கு 600 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கும் இந்த நிதியைப் பயன்படுத்தி பெருந்தோட்டத்துறையின் வருமானத்தை துரிதமாக அதிகரிப்பதற்கு பொருத்தமான பொறிமுறையொன்றை வகுப்பது தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்வதற்காக இலங்கை தேயிலை சபைக்கு அதிகாரத்தை வழங்புவதற்கும், அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த மானியத்தை பயன்படுத்தி தோட்டத் தொழிலாளர்களின் சமூக சேமநலம் மற்றும் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதன் மூலம் அவர்கள் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டு பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்களுக்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ஊடாக வருமானத்தை ஊக்குவிப்பதற்கான திட்மெடான்றை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி அமைச்சரும் பெருந்தோட்டத்துறை அமைச்சரும் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்திற்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் சம்பளத்திற்கு மேலதிகமாக நாளொன்றுக்கு 50ரூபாவை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன்படி இந்த நிதி இதற்கு பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *