Search
Sunday 12 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவை பெற்றுக்கொடுப்பேன் : கொட்டகலையில் கோட்டா உறுதி

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவை பெற்றுக்கொடுப்பேன் : கொட்டகலையில் கோட்டா உறுதி

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை தான் ஆட்சிக்கு வந்ததும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
இன்று கொட்டகலையில் நடத்தப்பட்ட கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு தமிழ் மொழியிலும் அவர் உரையாற்றியுள்ளார்.
இதன்போது அவர் குறிப்பிடுகையில்,
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை நிச்சயம் கட்டியெழுப்புவேன். செய்யக்கூடிய விடயங்களையே தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். அத்துடன், மலையகத்துக்கு தனி பல்கலைக்கழகம் அமைக்கப்படும். சுகாதாரம் உட்பட அனைத்து துறைகளையும் மேம்படுத்துவோம். ஆறுமுகன் தொண்டமானுடன் இது சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளோம். தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் வகையில் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்று கொடுப்பேன். என தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *