Search
Tuesday 29 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தோனியுடன் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார்

தோனியுடன் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி தனது ஓய்வை அறிவித்து சிறிது நேரத்தில் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் 7.29 மணியிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரெனப் பகிர்ந்தார் மகேந்திர சிங் தோனி. அவர் அறிவிப்பு தந்த அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் மீள்வதற்குள், சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி உள்ளிட்ட மற்ற இந்திய வீரர்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ரெய்னா, “தோனி, உங்களுடன் இணைந்து விளையாடியது என்றுமே இனிமையாக இருந்ததே தவிர வேறெப்படியும் இல்லை. என் இதயம் முழுக்க பெருமிதத்துடன், நானும் உங்களோடு இந்தப் பயணத்தில் இணைகிறேன். நன்றி இந்தியா. ஜெய்ஹிந்த்” என்று குறிப்பிட்டுள்ளார்.
-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *