Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நசீர் அகமட் மன்னிப்புக் கோர வேண்டும்

நசீர் அகமட் மன்னிப்புக் கோர வேண்டும்

கடற்படை அதிகாரியை அவமதித்ததற்காக, அவரிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட்  நிபந்தனையின்றி மன்னிப்புக் கோர வேண்டும் என்று  முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் .

கடற்படை அதிகாரியிடம் கிழக்கு முதலமைச்சர் மன்னிப்புக் கோரிய பின்னர், இந்தச் சூழ்நிலை ஏற்பட்டமைக்கான காரணங்களை ஆய்வு செய்ய முடியும்.

இந்தச் சம்பவங்களை வைத்து சில சக்திகள் அரசியல் ஆதாயம் தேட முனைகின்றன. அந்த சக்திகளுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது.

பிளவுகளை ஏற்படுத்த முனையும் சக்திகளின் பொறிக்குள் நாம் அகப்படக் கூடாது. இந்தச் சம்பவங்களின் பின்னால் அரசியல் நோக்கங்கள் இருக்கக் கூடும் என்று  அவர் தெரிவித்துள்ளார்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *