Search
Monday 22 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நந்திக் கொடி ஊர்வலத்துடன் மன்னாரில் மிகவும் சிறப்பாக நடைபெறும் இந்து மாநாடு

நந்திக் கொடி ஊர்வலத்துடன் மன்னாரில் மிகவும் சிறப்பாக நடைபெறும் இந்து மாநாடு

மன்னாரில் மிகவும் சிறப்பான முறையில் இந்து மாநாடு நடைபெற்று வருகின்றது.

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலைகளின் இணையத்துடன் மன்னார் நகரசபை மண்டபத்தில் இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

மன்னார் நகரம் முழுவதும் நந்திக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் காலை 9 மணிக்கு மன்னார் நுழைவாயிலில் உள்ள பாலத்தடியில் ஆரம்பமான ஊர்வலம் பெரும்திரளான மக்களுடன் மன்னார் நகரசபை மண்டபத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தில் நடராஜர் சிலை கொண்டு வரப்பட்டதுடன், நந்திக் கொடிகளையும் ஏந்தியவாறு மக்கள் சென்றனர்.

நகரசபை கலாசார மண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் இரு அமர்வுகளாக நடைபெற்று வருகின்றது. காலை நிகழ்வுகள் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அரங்கில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த சுவாமிகள் முன்னிலையில் இடம்பெறுகிறது. மன்னார் அறநெறி பாடசாலைகளின் இணையத்தின் தலைவர் செந்தமிழருவி சிவஸ்ரீ மகா தர்மகுமார குருக்கள் தலைமையில் நடைபெறுகிறது. இதில் யாழ்.பல்கலைகழக விரிவுரையாளர் சட்டத்தரணி கோசலை மதன், கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன், வவுனியா தமிழ் சங்க ஸ்தாபகர் தமிழருவி த.சிவகுமாரன், கொழும்பு இராமநாதன் கல்லூரி அதிபர் திருமதி கோதை நகுலராஜா, சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஸதாபகர் இலக்கியமணி சி.கணேஸ்குமார், ஈலிங் கனக துர்க்கை ஆலய தலைவர் ரீ.யோகநாதன், லண்டன் சிவன் கோவில் அறங்காவலர் வி.கணேசமூர்த்தி, மன்னார் ஆங்கில வள நிலைய முகாமையாளர் எஸ்.சண்முகலிங்கம், மன்னார் சித்தி விநாயகர் இந்துகல்லூரி அதிபர் த.தனேஸ்வரன், சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிசானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது இந்து சமயத்தின் தொன்மை, அதன் வரலாற்றுச் சிறப்புக்கள் தொடர்பான கருத்துரைகள் இடம்பெற்றதுடன் கலை நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றது. மாலை அமர்வுகள் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் உலகப் புகழ் பெபற்ற பேச்சாளர் சொல்வேந்தர் சுகி சிவம் கலந்து கொள்ளவுள்ளார்.

IMG_0763 IMG_0766 IMG_0775 IMG_0777 IMG_0782 IMG_0798 IMG_0809 IMG_0812 IMG_0817 IMG_0829

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *