Search
Wednesday 24 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நம்பிக்கையில்ல பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன் மகிந்தவை ரணில் சந்தித்தது ஏன்? அனுர கேள்வி

நம்பிக்கையில்ல பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்  மகிந்தவை ரணில் சந்தித்தது ஏன்? அனுர கேள்வி

கடந்த வியாழக்கிழமை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று நடத்தப்பட்டுள்ளதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அனுரகுமார இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் சரியான முடிவை எடுத்திருந்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிபெற வைத்திருக்கலாம். ஆனால் இருவரும் தவறிழைத்துவிட்டனர். இலஞ்ச அரசியல் ஊடாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கான ஆதரவை திரட்டியது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்ன? இரு தலைவர்களும் நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *