செய்திகள்

நல்லூரைச் சென்றடைந்தது திலீபனின் உருவப்படம் தாங்கிய நடைபயணம்

தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வவுனியாவில் ஆரம்பமான நடைபயணம் நல்லூரை சென்றடைந்ததுகுறித்த நடைபயணம் இன்று வியாழக்கிழமை காலை நாவற்குழி சந்தியிலிருந்து பயணித்த நிலையில், தற்போது நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை சென்றடைந்தது.வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து தியாக தீபத்தின் உருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் இணைந்து கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகிய நடைபயணம், நேற்று நண்பகல் அளவில் நாவற்குழியைச் சென்றடைந்தது. அங்கு அஞ்சலி நிகழ்வுகள் பல இடம்பெற்றன.அதனைத்தொடர்ந்து நாவற்குழியிலிருந்து இன்று அதிகாலை பயணித்த நடைபயணம் தற்போது நல்லூரைச் சென்டைந்துள்ளது.

இதனையடுத்து அங்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.இதேவேளை, 32ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு யாழ். நல்லூர் பின் வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் 32 அடி உயரத்தில் அவரின் பாரிய பதாதையொன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.(15)IMG_2801-1