Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாங்களே அரசாங்கம் அமைப்போம் – யாரையும் கூட்டு சேர்க்க மாட்டோம் : எட்டியந்தோட்டையில் சஜித் உறுதி

நாங்களே அரசாங்கம் அமைப்போம் – யாரையும் கூட்டு சேர்க்க மாட்டோம் : எட்டியந்தோட்டையில் சஜித் உறுதி

ஆகஸ்ட் 6ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அமைவது உறுதியெனவும் இந்த அரசாங்கம் வேறெந்த தரப்பினருடனும் சேராது தனியான அரசாங்கத்தையே அமைக்குமெனவும் அந்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எட்டியாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எங்களின் பயணம் தனித்துவமானது. நாங்கள் அரசியலில் யாரின் ஆதரவையும் கோர மாட்டோம். நிச்சயமாக 5ஆம் திகதி மக்களின் வாக்குகளால் வெற்றிப் பெறுவோம். இதன்போது யாரினதும் ஒத்துழைப்பும் இன்றி தனியான அரசாங்கத்தை அமைப்போம். நாங்கள் அரசாங்கத்தை அமைத்த பின்னர் கிராம ராஜ்யம் அபிவிருத்தி தொடர்பாக விசேட செயலணியொன்றை அமைப்போம். அதன் பிரதானியாக நான் இருப்போம். அன்று முதல் நாங்கள் பாரிய அபிவிருத்திக்கான பொறுப்பை எமது சகல உறுப்பினர்களுக்கும் வழங்குவோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *