Search
Saturday 18 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முன்னாள் ஜனாதிபதிகளுக்குறிய நிதி ஒதுக்கீட்டை நிறுத்துவோம் : அனுரகுமார

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முன்னாள் ஜனாதிபதிகளுக்குறிய நிதி ஒதுக்கீட்டை நிறுத்துவோம் : அனுரகுமார

நாட்டின் வீணடிக்கும் பதவியாகவே ஜனதிபதி அமைந்துள்ளது. தனி நபர் ஒருவருக்காக கோடிக்கணக்கான ரூபாவை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்படும் நிதியை நிறுத்துவோம் என தெரிவித்துள்ள ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாட்டிலுள்ள சகல ஜனாதிபதி மாளிகைகளையும் மக்கள் மயப்படுத்த நடவடிக்கையெடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதிகளுக்காகவும் வீணான நிதி ஒதுக்கப்படுவதாகவும் இதனையும் நாங்கள் நிறுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எத்தனை ஜனாதிபதி மாளிகைகள் இருக்கின்றன. யாழ்ப்பாணம் , அனுராதபுரம் , கண்டி , நுவரெலியா , எம்பிலிப்பிட்டிய , பாசிக்குடா , மகியங்கனை ஆகிய இடங்களில் மாளிகைகள் உள்ளன. இந்த மாளிகைகளில் வருடத்திற்கு இரண்டு இரவுகள்கூட தங்கியதில்லை. ஆனால் 100 பேர் வரையில் காவல்காரர்களும் , 200 பேர் வரையில் ஊழியர்களும் அவற்றில் இருக்கின்றனர். நாங்கள் மக்களிடம் ஒன்றே கேட்கின்றோம். எமக்கு ஒரு தடவை அதிகாரத்தை தாருங்கள். இவை அனைத்தையும் மக்கள் சொத்துக்களாக மாற்ற நடவடிக்கையெடுக்கின்றோம்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதிகளும் அவர்களின் மனைவி பிள்ளைகளும் அரசாங்கத்தினாலேயே பராமரிக்கப்படுகின்றனர். வீடு , காவல்காரர்கள் உள்ளிட்ட அனைத்தையும் வழங்கி பாராமரிக்கின்றனர். ஆனால் முன்னாள் ஜனாதிபதிகள் யாரும் கொழும்பில் வசிப்பதற்கு வீடு இல்லாமல் இல்லை. அவர்களுக்கு சொத்துக்கள் இல்லாமல் இல்லை. அவர்களை பார்த்துக்கொள்ள பிள்ளைகளும் இல்லாமல் இல்லை. இவ்வாறான நிலைமையில் அரசாங்கத்தினால் அவர்களை பராமரிக்க வேண்டுமா? நாங்கள் இவ்வாறாக பராமரிப்பதற்கான அனைத்தையும் இல்லாது செய்வோம். ஜனாதிபதி பதவியென்பது நாட்டின் சொத்து மற்றும் நிதியை வீனடிக்கும் வகையிலேயே இருக்கின்றது. பெருமளவு கோடியை தனி நபர் ஒருவருக்காக ஒதுக்க வேண்டுமா? இது அவசிமற்றது. இவ்வாறான முன்மாதிரியுடனேயே நாங்கள் செல்வோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *