Search
Tuesday 19 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாங்கள் தவறிழைக்கவில்லை – இலங்கையின் முன்னாள் வீரர்கள் தெரிவிப்பு

நாங்கள் தவறிழைக்கவில்லை – இலங்கையின் முன்னாள் வீரர்கள் தெரிவிப்பு

இலங்கையின் இரு முன்னாள் வீரர்களான ஜீவந்தகுலதுங்கவும் டில்கார லொக்குஹெட்டிகேயும் தாங்கள் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளனர்
கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை உண்டுபண்ணியுள்ள அல்ஜசீராவின் விவரணச்சித்திரத்தில் இடம்பெற்றுள்ள நிலையிலேயே இரு வீரர்களும் தாங்கள் தவறிழைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
நான் அப்பாவி என தெரிவித்துள்ள ஜீவந்த குலதுங்க நான் இதில் சிக்கவைக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மும்பாயின் முன்னாள் வீரர் ரொபின் மொறிஸை எனக்கு நீண்டகாலமாக தெரியும் என தெரிவித்துள்ள அவர் சில நாட்களிற்கு முன்னர் அவர் என்னை தொடர்புகொண்டு நான் இலங்கையில் உள்ளேன் என தெரிவித்தார் நான் அவரை சென்று பார்த் தேன் ஓன்றாக மது அருந்தினோம் அதனை பயன்படுத்தி என்னை சிக்கவைத்துள்ளனர் என ஜீவந்த குலதுங்க தெரிவித்துள்ளார்.
அவர் என்னநோக்கத்துடன் வந்திருக்கின்றார் என்பது எனக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ள ஜீவந்த குலதுங்க அவர் தனது நண்பர் என ஓருவரை அறிமுகப்படுத்தினார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நான் எந்த தவறும் செய்யவில்லை எனினும் எனக்கு எதிராக தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர் நான் எனது சட்டத்தரணிகள் மூலமாக இந்த விடயத்தை அணுகப்போகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மற்றைய வீரரான டில்கார லொக்குஹெட்டிகேயும் தன்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அல் ஜசீராவின் வீடியோவில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுவது குறித்து கருத்து தெரிவித்த இரு முன்னாள் வீரர்களும் பயிற்றுவிப்பாளர்களுமான இருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை அணிக்காக இரு ரி20 போட்டிகளில் விளையாடிய வரும்இலங்கை மகளிர் அணிக்கு தலைமை தாங்கியவரும் மேல்மாகாண அணியின் பயிற்றுவிப்பாளருமாக பணியாற்றுவருமான ஜீவந்த குலதுங்கவையும்,கம்பஹாவின் பயிற்றுவிப்பாளர் தரிந்து மென்டிசையும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இடைநிறுத்தியுள்ளது.
இருவரும் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்ட நபருடனும் அல்ஜசீரா செய்தியாளருடனும் உரையாடுவதை குறிப்பிட்ட வீடியோ காண்பித்துள்ளது.
ஆடுகள சதி குறித்த விசாரணையின் போது தரிந்து மென்டிஸ் காணப்படுகின்றார்.
இதேவேளை குலதுங்க ஆட்டநிர்ணய சதியில் ஈடுபடுவது குறித்து தெரிவிப்பதை அல்ஜசீராவின் வீடியோ காண்பித்துள்ளது.
கிரிக்கெட் விளையாடுவது எங்களிற்கு காலையில் பல்துலக்குவது போன்ற விடயம் என குறிப்பிட்டுள்ள அவர் உங்களின் திட்டத்தின் படி கிரிக்கெட் விளையாடுவதே இலகுவான விடயம் ஏனென்றால் எங்களிற்கு அழுத்தங்கள் எதுவும் இல்லை என குறிப்பிடுகின்றார்.
அல்ஜசீராவின் விவரணசித்திரம் மூலம் நாங்கள் ஆட்டநிர்;ணய சதியில் ஈடுபட்டவர்களின் பெயர் விபரங்களை அறிந்தவுடன் அவர்களை உடனடியாக இடைநிறுத்திவிட்டோம் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வீடியோவில் காணப்பட்ட மூன்றாவது வீரரான டில்கார லொக்குஹெட்டிகே தற்போது அவுஸ்திரேலியாவில் வசிப்பதாலும் அவர் பதவிகள் எதனையும் வகிக்காததாலும் அவரிற்கு எதிராக நடவடிக்கைகள் எதனையும் எடுக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *