Search
Tuesday 7 April 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாங்கள் பட்ட துன்பங்களுக்கு மஹிந்த ராஜபக்சவும் கோட்டாபய ராஜபக்சவும் பதில் சொல்லியே தீரவேண்டும் -சிவஞானம் சிறிதரன்

நாங்கள் பட்ட துன்பங்களுக்கு மஹிந்த ராஜபக்சவும் கோட்டாபய ராஜபக்சவும் பதில் சொல்லியே தீரவேண்டும் -சிவஞானம் சிறிதரன்

கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் ‘வல்லதேசத்தின் வலிமை மிகு பெண்களாக’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் நேற்று பசுமைப் பூங்காவில் நடைபெற்றது.குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்துகொண்டு உரையாற்றுகையில் நாங்கள் பட்ட துன்பங்களுக்கு மஹிந்த ராஜபக்சவும் கோட்டாபய ராஜபக்சவும் பதில் சொல்லியே தீரவேண்டும் என தெரிவித்தார்.70 ஆண்டுகளுக்கு மேலாக நாம் அரசியல் உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். மனித குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரங்களுக்குச் சர்வதேசம் ஆதாரம் வைத்திருக்கின்றது என மேலும் தெரிவித்தார்.

இந்த உலகில் பெண்கள் பலர் நாடுகளின் தலைவர்களாக இருந்திருக்கின்றார்கள். ஆனால், அந்தப் பெண் தலைவர்களால் எத்தனை பெண்கள் தலைவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஆனால், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மட்டும் பல பெண்களை ஆயுத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வளர்த்து, தளபதிகளாக – பொறுப்பாளர்களாக உருவாக்கியிருக்கின்றார்.இப்போதும் இன விடுதலைப் போராட்டத்திலும் பெண்களின் வகிபாகம் மிக முக்கியமானது. எங்கள் கண்களுக்கு முன்னாலே தாய்மார் ஒப்படைத்த பிள்ளைகளை வெளிக்கொணரப் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களில் 16 பேர் தங்கள் பிள்ளைகளைத் தேடியே சாவடைந்திருக்கின்றார்கள்.

காணி விடுவிப்புப் போராட்டத்திலும் பெண்களே போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், இதை எல்லாம் மறுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – இந்த இனப்படுகொலைகளுக்குக் காரணமாக இருந்தவர் – மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்குக் காரணமாக இருந்தவர் – அவர் கூறுகின்றார் யாருமே சரணடையவில்லை என்று.இந்த நாட்டில் இனப்பிரச்சினை ஒன்று இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஜனாதிபதியாகத் தன்னை அடையாளப்படுத்த நினைக்கின்றார் என்றால் அது எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *