Search
Tuesday 23 April 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாடாளுமன்றம் கலைப்பு மூன்றாம் நாள் விசாரணைகள் ஆரம்பம்

நாடாளுமன்றம் கலைப்பு மூன்றாம் நாள் விசாரணைகள் ஆரம்பம்

பிரதம நீதியசரசர் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந்த மனுக்கள் இன்று மூன்றாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.

குறித்த மனுக்கள் மீது நேற்றும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் அதன் தொடர்சியாகவே இன்று மூன்றாவது நாளாகவும் மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட 13 தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளன.குறித்த மனுக்களின் இடை நிலை மனுதாரர்களின் வாதங்களும் அதன் பின்னர் மனுதாரர்களின் பதில் வாதங்களும் மன்றில் இன்றைய தினம் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *