Search
Tuesday 23 April 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை ஆரம்பமாகியுள்ளது

நாடாளுமன்ற அமர்வு இன்று  காலை ஆரம்பமாகியுள்ளது

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற அமர்வு இன்று புதன்கிழமைகாலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.இன்றைய நாடாளுமன்ற அமர்வினையும் தாங்கள் புறக்கணிக்க போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தரப்பினர் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிகழ்ச்சி நிரலை மாற்றி தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றுள்ளது.அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுக்காது ஒத்திவைப்புவேளை விவாதத்தை நடத்துவதற்கு குறித்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *